நெடுவாசல் பதிவிற்கு ஒரு பின்குறிப்பு:
நெடுவாசல்
நில குத்தகை குறித்த ஒரு
கட்டுரை, மற்றும் முந்தைய தமிழக
அரசு ONGC நிறுவனத்திற்கு வழங்கிய மைனிங் உரிமம்,
கனிமம் எடுப்பதற்கான உரிமை இரண்டும் பார்த்த பின்பு எழுந்த ஒரு எண்ணம்.
ஜல்லிக்கட்டு
நடுத்த தீர்வு தமிழக அரசிடமே
இருந்த போதும் ஒரு பெரிய
போராட்டம் வெடித்த பிறகே அந்த
முயற்சி எடுக்கப்பட்டது. நெடுவாசல் விஷயத்திலேயும் விவசாயிகளும், தமிழக அரசுமமே இந்த
திட்டத்தை நிறுத்த முடியும்.
விவசாயிகள்
நெடுவாசல் நிலத்தை ONGC நிறுவனத்திற்கு குத்தகைக்கு மட்டுமே வழங்கியுள்ளனர். குத்தகை
விதிமுறைகளை ONGC பின்பற்றாமல் இருந்தாலோ, அல்லது புதிதாக இந்த
திட்டத்தை நிறைவேற்றப் போகும் நிறுவனத்திற்கு குத்தைகை
தர மறுத்தோ விவசாயிகள்
இந்த திட்டத்தை கைவிட செய்யாலாம். நீதி
மன்றத்தின் துணையை நாடலாம்.
முந்தைய
தமிழக அரசு ONGC நிறுவனத்திற்கு Exploration அதாவது எண்ணெய் அல்லது
எரி வாயு இருக்கிறதா என்று
தேட மட்டுமே கனிம உரிமம் வழங்கியுள்ளது. இப்போது இந்த நிலம்,
திட்டம் ONGC இடம் இருந்து கை
மாறியிருக்கிறது. புதிதாக வரும் ஜெம்
லெபோரடரீஸ் நிறுவனத்திற்கு எண்ணெய் எடுக்கும் உரிமையை
தமிழக அரசு தர மறுக்கலாம்.
இவ்விரண்டில்
எது நடந்தாலும் இந்த திட்டத்திற்கு முற்றுப்ப புள்ளிதான்.
இது ஒரு பெரிய எண்ணெய்
கிணறும் அல்ல, இத்திட்டத்தால் யாரும்
கொள்ளை கொள்ளையாக பணம் சம்பாதிக்கவும் போவதில்லை.
இதை நிறுத்துவதால் இந்தியா எண்ணெய் வளத்தில்
தன்னிறைவு நோக்கி செல்லும் பயணம்
தடைபடவும் போவதில்லை. இழப்பு தமிழ் நாட்டிற்குதான்.
இந்த போராட்டங்கள், முதலீட்டாளர்கள் வேறு மாநிலங்களை நோக்கி
போகச் செய்யும். இது ஒரு தற்காலிகக் கண்ணோட்டமதான்.
அது, என்றும் மாறிக்கொண்டேயல்லவா இருக்கும்.
Comments