Posts

Showing posts with the label #VengayinMaindan

வேங்கையின் மைந்தன்: கோவிட் சமயத்தில் ஒரு மறுவாசிப்பு

Image
முக்கால் வாசி சிநேகிதம் ரயில் சிநேகிதம்தான் , எங்கோ ஆரம்பித்து ஏதோ ஒரு இடத்தில் நமக்குத் தெரியாமலேயே மறைந்து போய்விடுகிறது . உறவுகள் கூட தொடருவதில்லை . காலப் பயணத்தில் எல்லாமே ஏதோ ஒரு ஜங்க்ஷனில், என்ஜினிலிருந்து கழட்டி விடப்பட்ட பெட்டிகளாகப் பிரிந்து போகிறது . 30-32 ஆண்டுகள் கழித்து ' வேங்கையின் மைந்தன் ' படிக்கத் துவங்கும் போது தொலைந்து போன நட்புகளும் , இழந்த நாட்களின் சுமையும் வந்து தாக்குகிறது . சிறு வயதிலிருந்தே புத்தகங்கள் சூழத்தான் வளர்ந்தேன் , அமர் சித்ரா கதாவிலிருந்து , கல்கி , விகடன் , மஞ்சரி , அம்புலிமாமா என்று எதெது கிடைத்ததோ அத்தனையும் படிப்பேன் . வீட்டில் பைண்டு செய்து வைக்கப்பட்டிருந்த சிவகாமியின் சபதம் , நீண்ட நாள் இடைவெளிக்குப் பிறகு கல்கி மீண்டும் வெளி வர ஆரம்பித்தபொழுது கல்கியின் magnum opus ' பொன்னியின் செல்வன் ' தொடர் வர ஆரம்பித்தது . பாட்டி ஏற்கனவே படித்திருந்தாலும் மறுபடியும் படித்தாள் , நானும் அவளுடன் சேர்ந்து படிக்க ஆரம்பித்தேன் . அது ஒரு பிரமிப்பான உலகம் . வந்திய...