நெடுவாசல், ஒரு நியாயமற்ற போராட்டம்
நெடுவாசல்
போராட்டம் பற்றி எறிந்துகொண்டிருக்கிறது, அதை பலரும்
ஊதி வளர்த்து வருகின்றனர். இந்த
போராட்டம் தேவைதானா? இல்லை, இந்த போராட்டம்
முற்றிலும் தவறு.
இந்த திட்டத்தைப் பற்றி எந்த தெரிதலும்
இல்லாத அதிகம்பேர் மிகவும் பயமுறுத்தக்கூடிய படங்களை
போட்டு, போஸ்டர் ஒட்டி இது
ஆபத்து, இந்த திட்டம் நிறைவேற்றினால்
தமிழ் நாடே பாலைவனமாக மாறும்
என்று கூறி வருகின்றனர்.
இதில் உண்மை என்ன? பிப்ரவரி
மாதம் நடந்த CCEA கூட்டத்தில், 31 சிறிய கச்சா எண்ணெய்
மற்றும் இயற்கை எரிவாயு
நிலைக்குழ கான்ட்ராக்ட் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இதில் 23 நிலைக்குழுமங்கள் onshore எனப்படும் நிலத்திலிருந்து எடுக்கும் திட்டங்களும், மீதம் offshore அதாவது கடலடியில் இருந்து
எடுக்கும் திட்டங்களும் ஒப்புதல் பெற்றது.
இந்த முப்பத்தியோரில் அதிகபட்சமான ப்ளாக்ஸ் இந்தியாவின் மிகப்பெரிய
எண்ணெய் நிறுவனமான ஆயில் அண்ட் நாச்சுரல்
காஸ் கார்ப் எனப்படும் ONGC நிறுவனத்தால்,
எண்ணெய் மற்றும் இயற்க்கை எரிவாயு
இருக்கிறது என நிரூபிக்கப் பட்டு
ஆனால் அவர்களால் அதை நிறைவேற்ற முடியாது
என்று திருப்பி அளிக்கப் பட்டவை.
பெரிய நிறுவனமாகையால் அவர்களுக்கு நிர்வாக செலவினங்கள் உயர்வாக
இருப்பதால், சிறிய நிறுவனங்கள் இதை
குறைந்த செலவில் உற்பத்திக்கு கொண்ட
வர முடியும் என்று
அரசாங்கம் இவைகளை மறுபடியும் ஏலத்திற்கு
விட்டு புதிய உற்பத்தியாளர்களுக்கு வழங்க
முடிவு செய்தது.
இது இன்றய, நேற்றைய முடிவல்ல.
சென்ற UPA அரசாங்கமே இதை செய்ய ஆலோசனை
ஆரம்பித்து NDA அரசாங்கம் இதற்க்கு உண்டான சில
புதிய விதி Discovered Small Fields Bid Round 2016 கொண்டு வந்தது. இதன்
மூலம் தேர்ந்தடுக்கப்பட்ட 31 ப்ளாக்சில் 2 மட்டுமே தமிழ் நாட்டில்
இருக்கிறது. அதில் ஒன்றுதான் நெடுவாசல். CY/ONDSF/NEDUVASAL/2016 எனப்படும் இந்த பிளாக் ஜெம் லெபோரேடரிஸ் எனும்
புதிய தனியார் நிறுவனத்திற்கு வழங்கப்பட தேர்வு செய்யப்பட்டிருக்கிறது.
இந்த பிளாக் 'conventional block' அதாவது நடைமுறையில் இருக்கும்
ட்ரில்லிங் மற்றும் உற்பத்தி முறையை
உபயோகித்து கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு உற்பத்தி செய்யக்
கூடியது. இது shale gas அல்லது coal bed methane போன்று மிகவும் கடினமான,
அதிக அளவில் கிணறுகள் ஏற்படுத்தி,
இரசாயநக் கலவைகள் செலுத்தி எண்ணைய்அல்லது வாயு வெளிக்கொணர வேண்டியதில்லை.
நெடுவாசல்
பிளாக் ஏறக்குறைய 2700 மீட்டரில் எண்ணெய் உற்பத்தி செய்யக்கூடும்,
இந்த ஆழத்தில் நிலத்தடி நீர்
மாசுபட வாய்ப்புக்கள் இல்லை, ஏனென்றால் தண்ணீர்
180 - 270 மீட்டரில் கிடைக்கிறது.
பின்னொரு
காலத்தில் நெடுவாசல் கிணறில் எண்ணை உற்பத்தி குறைந்து அப்போது
உற்பத்தி அதிகரிக்க இரசாயன கலவை செலுத்தி
உற்பத்தி அதிகரிக்கும் Enhanced Oil
Recovery (EOR) திட்டம் மேற்கொண்டாலும் அந்த இரசாயணம் கலந்த
நீரை சுத்திகரித்து மீண்டும் அந்த கிணற்றிலேயே
உபயோகப்படுத்தலாம்.
ஐக்கிய அரபு நாடுகள் தங்கள்
எண்ணைக்கிணறு இருக்கும் இடங்களில் எல்லாம் வேப்ப மரமும்,
துளசிச்செடியும், முல்லைக்கொடியும் வளர்த்து வருகிறது. சுற்றுச்சூழல்
வளப்படுத்த ஒரு பாலைவனத்திலேயே அவ்வாறு
செய்யமுடியுமென்றால் இந்த சிறிய பிளாக்கை
சுற்றி விவசாயம் செய்ய முடியாதா?
ஐக்கிய அரபு நாட்டில் அல்
எய்ன் எனும் இடத்தில் பாலைவனச்சோலை
உள்ளது. அங்கிருந்துதான் நாடு முழுவதற்கும் குடிநீர்
வழங்கப்படுகிறது. அங்கு சோலைகளுடன் கால
காலமாக எண்ணெய் உற்பத்தியும் தொடர்ந்து
கொண்டிருக்கிறது. தமிழகமே பாலைவனமாகும் எனப்
பொய்ப்பிரச்சாரம் செய்பவர்கள் இந்த உதாரணங்களை பார்க்க
மாட்டார்கள்.
இந்த திட்டத்தால் யாருக்குப் பயன்? ONGC நம் நாட்டில் உற்பத்தி
செய்யும் எண்ணெயின் அளவில் தமிழ் நாட்டின்
உற்பத்தி வெறும் 0.25 மில்லியன் டன் அல்லது 5% மட்டுமே.
அந்நாள் அதில் தமிழ்நாட்டுக்கு கிடைக்கும்
ராயல்டி வருடத்திற்கு 400 கோடி. அதனுடன் ONGC எண்ணற்ற
CSR நல்லது திட்டங்களும் தமிழ் நாட்டில் நடத்தி
வருகிறது. தமிழ் நாடு நகரங்கள்
நிறைந்த நாடு, தொழில் வளர்ச்சி
அடைந்த நாடு அதானால் அதனுடைய
எரிவாயுத் தேவைகளும் நாளுக்கு நாள் அதிகரித்து
வருகிறது. நெடுவாசல் விவசாயிகளும் தங்கள் டிராக்டர், பம்ப்செட்
இயக்க டீசலை எதிர்பார்க்கிறார்கள் அல்லவா? அப்படியிருக்க மாநிலத்தில் வரும் ஒவ்வொரு எரிவாயு
திட்டத்தையும் எதிர்த்தால் எப்படி? என்னூரில் திட்டம்
எதிர்ப்போம், கேரளாவிலிருந்து எரிவாயுக்குழாய் எதிர்ப்போம், கூடங்குளம் அணு மின்நிலையமா கூடவே
கூடாது.
எதிர்ப்பே
வாழ்வென்றிருந்தால் முன்னேற்றம் எங்கிருந்து வரும்? தொழில் வளர்ச்சியில்
முன்னிலையில் இருந்த மாநிலம், இடைவிடாத
போராட்டங்களால் அதை இழக்கக் கூடாது.
புதிய தொழில் முனைவோர் வளர,
இந்தியாவில் எண்ணெய் உற்பத்தி பெறுக
நெடுவாசல் போன்ற திட்டங்கள் ஒரு
சிறு முயற்சியே. ஏழு ஆண்டுகள் கழித்து
எண்ணெய் உற்பத்தியில் புதிய முதலீடு வர
இந்த திட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது.
"Unified Bidding Round" என்பது
ஒரு நிர்வாக புரட்சி, shale gas திணிக்கும்
ஒரு பூதம் அல்ல.
அதிக படிப்பறிவு மிக்க, வளர்ந்த மாநிலத்தில்
எப்படி இப்படிப்பட்ட பொய்ப்பிரச்சாரங்கள்
சாத்தியமாகிறது? உங்கள் பூமியிலிருந்து கிரோசின்
எடுப்போம் என்றதால் எங்கள் நிலங்களைக்
கொடுத்தோம், ஹைட்ரா கார்பன் என்றால் கொடுக்க மாட்டோம் என்று விவசாயிகள்
சொல்வதாக ஊடங்ககளும் எழுதுகின்றன. இவர்களுக்கு எந்த நிலத்திலிருந்தும் கிரோசின்
வரமுடியாது, அது ஒரு சுத்திகரிக்கப்பட்ட
பொருள் என்று தெரியாதா? கச்சா
எண்ணெய்க்கும், கிரோசினுக்கும் வித்தியாசம் தெரியாதவர்கள் ஒரு திட்டத்தை தடுத்து
நிறுத்துவார்களேயானால் தமிழ் நாட்டில் எந்த
ஒரு தொழிலும் தொடங்க முடியாத
நிலையே வரும். முதலில் ஹைட்ரோ
கார்பன் தமிழ் வார்த்தையா? ஹைட்ரொ
கார்பன் எனும் பூதத்தைக் கிளப்பியது
யார்?
P.S.கூகிள்
ட்ரான்ஸ்லிட்டரேட் கொண்டு
எழுதியது. எழுத்துப் பிழை, சொற்பிழை மன்னிக்கவும்.
Comments