நெடுவாசல், ஒரு நியாயமற்ற போராட்டம்
நெடுவாசல் போராட்டம் பற்றி எறிந்துகொண்டிருக்கிறது , அதை பலரும் ஊதி வளர்த்து வருகின்றனர் . இந்த போராட்டம் தேவைதானா ? இல்லை , இந்த போராட்டம் முற்றிலும் தவறு . இந்த திட்டத்தைப் பற்றி எந்த தெரிதலும் இல்லாத அதிகம்பேர் மிகவும் பயமுறுத்தக்கூடிய படங்களை போட்டு , போஸ்டர் ஒட்டி இது ஆபத்து , இந்த திட்டம் நிறைவேற்றினால் தமிழ் நாடே பாலைவனமாக மாறும் என்று கூறி வருகின்றனர் . இதில் உண்மை என்ன ? பிப்ரவரி மாதம் நடந்த CCEA கூட்டத்தில் , 31 சிறிய கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு நிலைக்குழ கான்ட்ராக்ட் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது . இதில் 23 நிலைக்குழுமங்கள் onshore எனப்படும் நிலத்திலிருந்து எடுக்கும் திட்டங்களும் , மீதம் offshore அதாவது கடலடியில் இருந்து எடுக்கும் திட்டங்களும் ஒப்புதல் பெற்றது . இந்த முப்பத்தியோரில் அதிகபட்சமான ப்ளாக்ஸ் இந்தியாவின் மிகப்பெரிய எண்ணெய் நிறுவனமான ஆயில் அண்ட் நாச்சுரல் காஸ் கார்ப் எனப்படும் ONGC நிறுவனத்தால் , எண்ணெய் மற்றும் இயற்க்கை எரிவாயு இருக்கிறது என நிரூபிக்கப் ...